Wednesday, April 25, 2012


சென்னையில் ஏசு! மூடப் பிரச்சாரம் பிசுபிசுத்தது!

சென்னையையடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில் இயேசுவின் முகம் தெரிவதாக ஞாயிற்றுக் கிழமை வதந்தி பரவியது. செய்தித்தாள்களும் படத்துடன் வெளியிட்டு விளம் பரம் செய்தவுடன் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். கடந்த ஞாயிறன்று (02.03.08) அக்கோயிலில் பூசைக்கு வந்த பக்தர்களில் யாரோ ஒருவர் முதலில் பார்த்ததாகவும், னர் பார்த்த அனைவரும் இயேசுவின் முகம் தெரிவதாகக் கூறியவுடன் வதந்தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இது பற்றி அப்பகுதியில் வசிக்கும் திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் தெரிவித்த தகவலையடுத்து திங்கள் கிழமை இரவு இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய றனர் இளைஞணியினர்.
மணிக்கூண்டில் இருந்து வழிந்த மழைநீரால் பாசி உருவாகியிருக்கிறது. அதில் மங்கலாகத் தெரியும் உருவத்தை, தங்களுக்கேற்றாற்போல் உருவகம் செய்துகொண்டு இயேசு தெரிவதாகப் புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் திடீரென ஒருவர் பக்கத்து தூணில் மேரி மாதா கையில் குழந்தையோடு தெரிவதாகச் சொல்ல அதையும் பார்த்து பரவசமடையத் தொடங்கிவிட்டார்கள். மேரி மாதாவின் கையில் குழந்தை, பின்னால் ஒளிவட்டம், அவர் அணிந்திருக்கும் கவுன், தலையில் மூடியிருக்கும் முக்காடு எல்லாம் தெரிவதாகக் கூறி இங்கே நடக்கிறார் என்றால் அங்கே பறக்கிறார் என்று வதந்தீ பரவும் என்பதைப் போல பரவத் தொடங்கி விட்டது.

இப்படி அடுத்தடுத்து வரும் செய்திகள் பற்றி அக்கோயிலின் இளம் பாதிரியார் சவரி முத்துவிடம் கேட்டபோது, கடவுள் பல வடிவங்களில் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதாகவும், அவ்வப்போது இவ்வாறு மக்களுக்கு காட்சி தருவதாகவும் கூறினார். நேற்று வெறும் இயேசுவின் உருவம் மட்டும் தெரிந்த நிலையில் இன்று மாதாவின் உருவமும் உருவாகியிருப்பதாகவும் சிலுவைத் தெரிவதாகவும் பார்த்து மக்கள் நம்புகிறார்கள். நாளை இந்த உருவம் இன்னும் தெளி வாகத் தெரியக்கூடும். எனவே இன்னும் கூர்ந்து பார்த்தால் உருவாகியிருக்கும் மற்ற உருவங்களையும் பார்க்கலாம் என்றார் அவர்.

இதுதான் சமயமென்று தூணில் தெரியும் உருவத்தைப் புகைப்படம் எடுத்து, அதை இயேசு உருவத்துடன் ஒப்பிட்டுப் புகைப்பட வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது.வினா எழுப்பிய கழகத் தோழர்கள்கூட்டத்தில் சிலரிடம் கேட்டபோது எனக்கு எம்.ஜி.ஆர் உருவம்போல் தெரிகிறது என்றார் சந்துரு என்ற எம்.ஜி.ஆர். பற்றாளர். இன்னொருவர் பக்கத்தில் இருந்த இன்னொரு தூணில் மான் உருவம் தெரிவதாகக் காட்ட பின்னர் மான் காட்சி யளிக்கத் தொடங்கிவிட்டது.

* கோயிலுக்குள் காட்சி தராமல் இப்படி தூணின் அடியில் பாசியில் தெரிவது ஏன்?

* இயேசு, மாதா என்று தொடர்ந்து உருவங்கள் உருவாகி வருகிறது என்றால், முதலில் மாதா உருவம் வந்து பின்னர்தானே மகன் இயேசு வின் வடிவம் வந்திருக்க வேண்டும்.?

* மழைநீரால் உருவாகி யிருக்கும் பாசி தானே அப்படித் தெரிகிறது. முழுதும் பாசியை சுரண்டிவிட்டு, அந்த இடத்தில் சுண்ணாம்பு அடித் தால் அவ்விடத்தில் மீண்டும் இவ்வுருவங்கள் தெரியுமா?

* சுரண்டப்பட்ட பாசி யைப் பரிசோதித்தால், அது இன்று நேற்று உருவானதா, அல்லது மழைநீர் வழிந்து உருவாகி நீண்ட நாட் களாகிவிட்டதா என்று தெரி யுமே? அதற்குத் தயாரா?

என்பது போன்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்கள் திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள்.ஆனால் இக்கேள்விகளுக்கு நம்பிக்கை என்று பதில் கூறித் தப்பித்தார்கள் பக்தர்கள். அங்கு குடியிருந்த இளைஞர் களோ, ஆம், அதுதான் சரி. அப்படி சுண்ணாம்பு அடித்த பின்னும் இயேசு உருவம் உருவானால் அப்போது நாங்கள் நம்புகிறோம் என்று உரக்கக் குரலெழுப்பட் தொடங்கிவிட்டனர்.

மாதா உருவத்தை தான் கண்டு பிடித்ததாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட சீனிவாசன் என்ற கணினிப் யாளரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஆட்டோ நர்கள் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டுட் திணறடித்தனர்.

உடுமலை, வை.கலையரசன், கருணாகரன், ரவிக்குமார், ராஜசேகர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான இளைஞரணித் தோழர்கள் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று கேள்விகளை எழுப்பினர்.

நன்றி: விடுதலை (04.03.2008)

அட்சய திருதியையா? - ஓர் எச்சரிக்கை



அட்சய திருதியை என்ற ஒன்று சமீப காலங்களில் ஒரே களேபரம்.
ஜோதிட சாத்திரப்படி - 15 திதிகளில் இந்த அட்சய திருதியைக்கு விசேஷமான பலன்கள் உண்டாம்.
சித்திரை மாதத்தில் சுக்லபட்சத்தில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் நாள் இதுவாம்.
இவை எல்லாம் எந்த விஞ்ஞானத்தில், வானியலில் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன? சூரியன் என்ற நட்சத்திரத்தை கோள்களின் பட்டியலில் வைத்தபோதே ஜோதிட சாஸ்திரத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய்விட்டதே!
சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் ஆய்வகத்தின் ஒரு பிரிவான பிர்லா கோளரங்கத்திற்குச் சென்று இந்த அட்சய திருதியைக்குச் சான்று பெற்றுவரத் தயாரா?
இவர்கள் குறிப்பிடும் திதிகளும் சரி, நட்சத்திரங்களும் சரி இவை ஒன்றிலாவது தமிழ்ப் பெயர் உண்டா?
இவை எல்லாம் பித்துக்குள்ளிப் பார்ப்பனர்களின் கிறுக்கல் சமாச்சாரங்கள் அல்லவா!
எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் மூடத்தனத்தைப் பரப்பி, அதனை மூலதனமாகக் கொண்டு பக்தி வியாபாரம் செய்து மக்களைச் சுரண்டும் பார்ப்பன சதி இவையில்லாமல் வேறு என்னவாம்?
ஒரு அப்துல்கலாமோ - ஒரு மயில்சாமி அண்ணாதுரையோ - இந்த ஜோதிடப்  பித்தலாட்டமான அட்சய திருதியை சரிதான் என்று சொன்னதுண்டா?
மாறாக மறுத்துதான் வந்திருக்கிறார்கள்!
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்த நேரம் -பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிரமோத் மகாஜன் - நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுத்தபோது, அப்துல்கலாம் நகைத்தார் - எனக்கு அவற்றில் நம்பிக்கை இல்லை என்று அவருக்கே உரித்தான நயத்தக்க நாகரிகத்துடன் மறுத்தாரே!
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ எச்) கூறும் நிலையில், இதுபோன்ற அட்சய திருதியைகளை தடை செய்வதுதானே நல்லதோர் அரசின் கடமையாக இருக்க முடியும்?
அட்சய திருதியையில் ஒரு குன்றிமணி அளவு தங்கமாவது - கடன் வாங்கியாவது வாங்கவேண்டுமாம் - அப்படி வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வலட்சுமி  அவர்கள் வீட்டில் தாண்டவமாடுவாளாம்.
இதுவரை அப்படி வாங்கியவர்கள் வீட்டில் செல்வம் பொங்கி வழிகிறது என்பதற்கு ஆதாரம் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?
ஏற்கெனவே கடன் பட்டு விழி பிதுங்கிக் கிடக்கும் பாமர மக்களை கடன் வாங்கித் தங்கத்தை வாங்கத் தூண்டுவது சமூக விரோதச் செயல் அல்லவா!
அதுவும் தங்கத்தின் விலை நாளும் ராக்கெட் வேகத்தில் விண்ணில் விர்ரென்று ஏறிக்கொண்டு இருக்கிறது.
அட்சய திருதியை என்று சொல்லி அந்நாளில் தங்கத்தை வாங்கினால் க்ஷேமம் என்று நகை வியாபாரிகள் விளம்பரங்களை பக்கம் பக்கமாக வெளியிட்டு பாமர மக்களின் மூக்கைச் சொறிந்து விடுகிறார்கள். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?
புதுச்சேரியில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தினர் கடந்த நான்கு ஆண்டுகாலமாக நல்லதோர் பணியைச் செய்து வருகிறார்கள்.
பொதுமக்களே, உஷார்! உஷார்!! அட்சய திருதியை என்று விளம்பரம் செய்து, நகை வியாபாரிகள் போலியான நகைகளை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் - ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
தங்கம் அரசின் கஜானாவில் இருக்கட்டும் - மக்களைத் திவாலாக்கும் அட்சய திருதியை என்னும் கண்ணிவெடியில் சிக்கவேண்டாம்! சிக்கவேண்டாம்!!

வேளாங்கன்னியில் ஏசு சிலையில் நீர் சொட்டுவது அற்புதச் செயல் அல்ல - திட்டமிட்ட ஏற்பாடே!



அறிவியல் மூலம் நிரூபித்த பகுத்தறிவுச் சங்கத் தலைவர் எடமருகுமீது குற்றப் பத்திரிகையாம்

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் இலட்சணம் இதுதானா?

மும்பை, ஏப்.  22- ஏசு கிறிஸ்துவின் சிலையில் இருந்து நீர் சொட்டுவது ஒன்றும் அற்புதம் அல்ல என்றும், அதிக அழுத்தத்தால் குறுகிய குழாயில் நீர் மேலே ஏறும் சாதாரண அறிவியல் நிகழ்ச்சிதான் அது என்றும் கூறிய சங்க பகுத்தறிவாளர்  தலைவர் சேனல் எடமருகு மீது மும்பை ஜூஹூ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பகுத்தறிவாளர் சங்கம் 1930 இதே மும்பையில்தான் ஆர்.பி.பரஞ்பே அவர்களால் தொடங்கப் பட்டது. 90 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மும்பையில்   பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் மீது முதன் முதலாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத் துலக பகுத்தறிவாளர் கழகத்தில் புகழ் பெற்ற அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்கள் உறுப்பினர்களாக உள்ள னர். ஒரு  பிரிவு மக்களின் மத உணர்வு களை புண்படுத் தும் நோக்கத்துடன் பேசுவது, செயல்படுவது  என்னும் இந்தி யக் குற்றவியல் சட்டத்தின் 295-ஏ பிரிவின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பகுத்தறிவுப் பெற்றோருக்குப் பிறந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக மதத் தலைவர்கள் மற்றும் கடவுள் அற்புதங்கள் எனப்படுபவைகளின் பின்னணியில் அறிவியல் இருப்பதை தனது சோதனை கள் மூலம்  மெய்ப்பித்துள்ளார். சபரிமலை யில் தெரியும் ஜோதி மனிதர்களால் ஏற்றப் படும் தீ என்பதையும் அவர் மெய்ப்பித்தார். சத்ய சாய்பாபா போன்ற கடவுள் மனிதர் களின் அற்புதங்கள் எல்லாம் போலி யானவை என்றும் அவர் மெய்ப்பித் துள்ளார்.
வேளாங்கன்னி தேவாலயத்தில் சிலுவையில் இருந்து தண்ணீர் சொட்டு வதில் எந்த ஒரு அற்புதமும் இல்லை என்று டில்லியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மார்ச் 5 ஆம் தேதி சேனல் எட மருகு கூறியதைத் தொடர்ந்து தொடங் கியது இந்தக் கதை. இது பற்றி ஆய்வு செய்யும்படி அவரைக் கேட்டுக் கொண்ட 9 ஆவது தொலைக்காட்சி நிறுவனம் அவரை விமானத்தில் அனுப்பி வைத்தது. மார்ச் 10 அன்று வேளாங்கன்னிக்கு வந்த சேனல் எடமருகு நீர் சொட்டும் சிலுவையை ஒளிப் படங்கள் எடுத்துக் கொண்டார்.
வேளாங்கன்னியில் அற்புதம் நிகழ்வ தாகக் கூறப்பட்ட இடத்தைப் பார்த்த சேனல் எடமருகு அதிக அழுத்தத்தில் குறுகிய குழாய் மூலம் மேலே ஏறும் என்னும் தத்துவத்தின்படி, சிலுவைக்கு அருகே நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர் மேலே ஏறி ஏசுவின் சிலையில் இருந்து சொட்டுகிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். அருகில் உள்ள சாக்கடையின் மீதிருந்த ஒரு மறைப்புக் கல்லை நான் நீக்கியபோது, அங்கு தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்டேன்.  தண்ணீரின் ஓட்டம் தடைப் பட்டால் அது வெளியேறுவதற்கான வழியைப் பார்க்கும். கீழ் நோக்கிச் செல்ல முடியாதபோது, மேல் நோக்கியும் தண்ணீர் செல்லும். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மரங்கள் நிலத்தி லிருந்து தங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுகின்றன என்பதை ஒவ்வொரு மாணவரும் அறிவர் என்று அவர் கூறினார்.
நான் அந்த இடத்தை அடைந்தபோது, சாலையில் சிலுவைக்கு அருகே ஒரு பாதிரியார் தொழுகை நடத்திக் கொண் டிருந்தார். சிலுவையில் இருந்து சொட்டிய தண்ணீர் ஒரு பக்கெட்டில் சேகரித்து வைக்கப்பட்டு, அங்கு கூடியிருந்த பக்தர் களுக்கு விநியோகிக்கப் பட்டது. அற்புதம் என்று எழுதப்பட்டிருந்த சிலுவையில் இருந்து தண்ணீர் சொட்டும் ஒளிப்படம் ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். அந்தத் தண்ணீரை வேதியியல் சோதனைக்கு உட்படுத்த விரும்பிக் கேட்ட போது எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடுக்க மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதங்களில் கிறித்துவ தேவாலயங்கள் அற்புதங்களைத் தேடி அலைவதாக சேனல் எடமருகு குற்றம் சாட்டினார்.  அந்த விவாதத்தில் மும்பையின் ஆர்ச் பிஷப் ஆஞ்சலோ கிரேசியாஸ் கலந்து கொண்ட செய்தி ஆர்வம் அளிப்பதாகும். இந்த நிகழ்ச்சியை தேவாலயம் அற்புதம் என்று கூறவில்லை என்றும், அதைப் பற்றிய முறையான விசாரணைக்குப் பிறகுதான் இது பற்றி எதுவும் கூறமுடியும் என்று பிஷப் அறிவித்தார். கிறித்துவ தேவாலயம் அறிவியலுக்கு எதிரி இல்லை என்றும் போப் அறிவியல் கழகத்தை அது உருவாக்கி உள்ளது என்றும், கலீலியோவும் அதன் உறுப்பினர் என்றும் பிஷப் கூறினார்.  அப்போது, கலீலி யோவை தேவாலயம் சிறை வைத்திருந்ததையும்,  கியார்டனோ ப்ரூனோவை எரித்ததையும், அதற்காக போப் பால் மன்னிப்புக் கேட்டதையும் சேனல் எடமருகு சுட்டிக் காட்டினார்.
பேயை ஓட்டும் செயலில் வாடிகான் ஈடுபட்டிருப்பது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று சேனல் எடமருகு பிஷப்பிடம் கேட்டபோது, பேய் பிடித்திருந்த நிகழ்ச்சிகள் எதனையும் தான் கண்டதில்லை என்றாலும், அதனை உண்மையல்ல என்று நிராகரிக்க முடியாது என்று பிஷப் கூறினார்.
இந்த விவாதம் முழுவதிலும், அதில் கலந்து கொண்டவர்கள், தேவாலயம் மீது குற்றம் சாட்டியதற்காக  சேனல் எடமருகு மன்னிப்புக் கேட்காவிட்டால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
தேவாலயத்தின் சகிப்புத்தன்மை இன்மையே அய்ரோப்பிய கண்டத்தில் இருண்ட காலத்தைத் தோற்றுவித்தது என்று கூறிய சேனல் எடமருகு இந்தியாவுக்கும் அத்தகைய இருண்ட காலத்தைக் கொண்டு வர முயலாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பெர்னான்டஸ் என்பவர் ஜூஹூ காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.  தேவாலயத்தை பற்றியும், போப் பற்றியும் சேனல் எடமருகுவின் அறிக்கைகள் தனது மத உணர்வுகளைக் புண்படுத்தும்படி உள்ளதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
டில்லியில் வசிக்கும் சேனல் எடமருகு, அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது எனது கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது, வேண்டுமானால் எனது அடிப்படைக் கடமையைச் செய்வதைத் தடுக்கும் வகையில் என்னைக் கைது செய்யட்டும்  என்று கூறினார்.
அவருக்காக வாதாட ஒரு பாதுகாப்புக் குழு  வழக்கறிஞர் என்.டி.பச்சோலியால் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் அவரிடம் விசாரணை செய்ய மும்பை காவல்துறை அவரை அழைத்துள்ளது.

Thursday, April 12, 2012

முன்ஜென்ம வியாபாரியிடம் ஏமாந்த இலங்கைப் பெண்


உண்மை சொன்னது உண்மையானது

முன்ஜென்ம வியாபாரியிடம் ஏமாந்த இலங்கைப் பெண்
அறிவியலைத் துணைக்கழைத்து மூடநம்பிக்கையைப் பரப்பும் பக்தி வணிகர்களை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றுப் பேர்வழிகள் ஏராளம் உருவாக தொலைக்காட்சி என்ற அறிவியல் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் வலிமையைக் கொண்டு அம்மனுஷ்யம் என்றும், முன்ஜென்மம் என்றும் படமாக்கி நிகழ்ச்சிகளை வழங்குவதை விஜய் தொலைக்காட்சி தொடர்ந்து செய்துவருகிறது. இந்நிகழ்ச்சிகளில் பகுத்தறிவாளர்களின் பதில்களையோ, துறை சார்ந்த அறிவியலாளர் களையோ அழைத்துப் பேசுவதில்லை என்பதிலிருந்தே இது அப்பட்டமான வணிக நிகழ்ச்சி என்பது வெளிப்படை. இப்போது ஒரு நிகழ்ச்சி இத்தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கிறது. முன்ஜென்மம் என்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் அனைவரும் சின்னத்திரை அல்லது சினிமா நடிகர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் பெறுவதைப் பெற்றுக்கொண்டு நன்றாகவே நடித்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

ஆனால், அதைப் பார்க்கும் பாமர மக்கள் உண்மை என்று நம்பி இந்தப் பித்தலாட்டக்காரர்களிடம் தம் பணத்தையும் அறிவையும் இழக்கின்றனர். இந்த முன்ஜென்மம் நிகழ்ச்சி நடத்துவோரை கடந்த பிப்ரவரி 1_15 உண்மை இதழில் அம்பலப்படுத்தியிருந்தோம். நாம் சொன்னது போலவே அந்த ஒரு ஏமாற்றுப் பேர்வழிகளை நேரில் சென்று தோலுரித்துள்ளது நக்கீரன் இதழ் (2012 மார்ச் 10_-13). ஒரு பெண்மணி முன்ஜென்மம் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இலங்கையில் இருந்து சென்னை வந்து முன்ஜென்ம நிகழ்ச்சியாளர் டாக்டர் வேதமாலிகாவைச் சந்தித்துள்ளார்.அப்போது என்ன நடந்து என்பதை அந்தப் பெண்மணியே விவரிக்கிறார். என் பேரு மிதிலா சர்பத்மநாதன். கொழும்புதான் எனக்கு சொந்த ஊர். நிறைய துணை நடிகர்-_நடிகைகளின் முன்ஜென்மத்தை வெளிக் கொண்டு வர்றாங்க டாக்டர் வேதமாலிகா. அதனால டாக்டர் வேதமாலிகாவை அலுவலக செல்நம்பருக்கு தொடர்புகொண்டு அப்பாயின்மெண்ட் கேட்டேன். பிளாக் நம்பர்_19 டோர் நம்பர்_3, ஆஞ்சநேயர் கோவில் தெரு, -ஸ்ரீசக்ரா நகர், மாங்காடு, சென்னை என்கிற முகவரிக்குப் போனேன். அந்த வீட்டைப் பார்த்தாலே ஏதோ பழைய சூனியக்காரியின் வீட்டைப்போல் காட்சியளித்தது. பார்ப்பதற்கே பயமா இருந்துச்சு. கடைசியாக அந்த அறைக்கு என்னை அழைத்தார் டாக்டர் வேதமாலிகா.
அந்த அறையைப் பார்த்தாலே பீதி கிளம்புகிறது. ஏதேதோ உருவங்கள் பொறித்த ஃபோட்டோக்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு படுக்கையில் படுக்கச்சொல்லி என்னை கண்களை மூடிக்கொள்ள சொன்னார். படபடப்பு டென்ஷனுடன் கண்களை மூடிக்கொண்டேன். உங்க உடமபு நீல நிறத்துல மாறுகிற மாதிரி கற்பனை பண்ணிக்கன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல அவங்களோட குரல் எனக்கு கேக்கல. மெல்ல கண்விழித்துப் பார்த்தேன். அவங்களை காணோம். பக்கத்துல ஒரு ஆண் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிக்கறாரு. பகீர்னு ஆகிடுச்சு. அதற்குப் பிறகு டாக்டர் வேதமாலிகா வந்து நீங்க மேல பறக்குற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க. நீங்க உங்க சின்ன வயசில என்னென்ன சம்பவங்கள் நடந்துச்சோ அதையெல்லாம் கற்பனை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க. அதே மாதிரி கண்ணை மூடி நினைச்சுக்கிட்டிருந்தேன்.
எனக்கு எதுவுமே தோணலை. இதுக்கு 4000 ரூபாய்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, 100 டாலர்ஸ் வாங்கிட்டாங்க. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4800 ரூபாய். ஒண்ணுமே நடக்கலையேங்க இதுக்கு எதுக்கு 4800 ரூபாய் வாங்குறீங்க?ன்னு கேட்டதுக்கு, நாளைக்கு வாங்க, கண்டிப்பா உங்களோட முன் ஜென்மத்தை கண்டுபிடிச்சுடலாம்.
முதல் தடவையே எப்படிம்மா முன் ஜென்மத்தை தெரிஞ்சுக்க முடியும்னு கோபமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு ஸ்டெப் கூட போகலையேங்க ஏன் இப்படி என்னை ஏமாத்துறீங்க?ன்னு கேட்டு ஆர்கியூமெண்ட் பண்ணினாலும் மணி இரவு 8:30 ஆகிடுச்சு. இதுக்குமேல இவங்ககிட்ட சண்டை போட்டா நமக்கு ஆபத்துன்னுதான் பயந்துக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். எனக்கு பணம் போனதெல்லாம் பெருசில்லங்க. ஆனா, முன் ஜென்மத்தை சொல்றேன்னு இந்த அளவுக்கு சீட்டிங் பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலைங்க என்கிறார் மன வேதனையோடு.
குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் வேதமாலிகாவிடம் இதுபற்றி விளக்கம் கேட்க மாங்காடு பகுதிக்கு சென்றோம். சந்திரமுகி படத்தில் வரும் பங்களாபோல் காட்சியளிக்கிறது. காந்தி காலத்து பழைய கார் ஒன்று நிற்கிறது. நிறைய சிலைகள் உள்ளன. மாடு கத்துவது கூட நாய் ஓலமிடுவது போன்ற சத்தம்போல் நம்மை மிரட்டுகிறது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யாரு மைண்டு டாக்டரை பார்க்க வந்திருக்கீங்களா? அவங்க வெளியில போயிருக்காங்க சார். அக்கம்பக்கத்துல உள்ளவங்க யாரும் அவங்கக்கிட்ட போகமாட்டாங்க. ஆனா, வெளியூர்லேர்ந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிறைய பெண்கள் வர்றாங்க. இந்த ஜென்மத்துல என்ன பண்ணறோம்னே தெரியலை, இதுல வேற முன்ஜென்மத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பண்ணப் போறோம்? என்று சிரிக்கிறார்கள்.
வேதமாலிகாவைத் தொடர்புகொண்டு பேசினோம்....
Unmaionline
நடிகர்_நடிகைகள் என்றால் ஏழெட்டு ஜென்மங்களுக்கு மேல் கூட போகமுடிகிறது. ஆனால் சாதாரண மக்கள் சில மன பிரச்சினைகளோடு என்னிடம் வருவதால் (நடிகர், நடிகைகளுக்கு மட்டும் மனப்பிரச்சினைகளே இல்லையா?) அவர்களின் முன்ஜென்மத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால்தான் மிதிலா சர்பத்மநாதன் எதிர்பார்த்த அளவுக்கு முன்ஜென்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துக்கொண்டவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் என்றாலும், நான் படித்த மெடிக்கல் சைக்காலஜிஸ்ட் என்றாலும் ஒன்றுதான். நான் கவுன்சிலில் (ஸிசிமி) பதிவு செய்யவில்லை என்றார். அப்போது உங்கள் பெயருக்குப் பக்கத்தில் எம்.டி. என்று போட்டிருக்கிறீர்களே? என்று கேட்டதற்கு, எம்.எட். படிப்பைத்தான் அப்படிப் போட்டிருக்கிறேன் என்று சமாளித்தார். இதுகுறித்து அகில இந்திய மனநல மருத்துவ நிபுணர்களின் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினரும் தமிழக கிளை இணைச் செயலாளருமான உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமாரிடம் பேசியபோது, ஹிப்னோ தெரபி மூலம் முன்ஜென்மத்துக்குப் போவது என்பது மருத்துவரீதியாக இதுவரை நிருபிக்கப்படவில்லை. மருத்துவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்வதுபோல ரிகாபிலிடேஷன் கவுன்சில் ஆஃப் இண்டியாவில் many more happy birthday.... பதிவு செய்தால்தான் இந்தியாவில் மனநல ஆலோசகராக பணியுரிய முடியும். அதற்கு கிளினிக்கல் சைக்காலஜியில் எம்.ஃபில் அல்லது 
பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும. ஆனால், இவர் அப்படி எதுவும் படிக்கவுமில்லை; பதிவு செய்யவுமில்லை. மேலும், வேதமாலிகா படித்ததாக குறிப்பிட்டுள்ள எந்த ஒரு படிப்புமே ஆர்.சி.அய்.யால் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அப்படியே வெளிநாட்டில் படித்திருந்தாலும் ஆர்.சி.அய். நடத்தும் தகுதித் தேர்வை எழுதியிருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால் இவர் ஒரு போலி மனநல ஆலோகராகத்தான் இருக்கமுடியும். முன்ஜென்மம் என்கிற பெயரில் மனநல மருத்துவத் துறையையே கேவலப்படுத்தும் இவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப் போகிறோம் என்றார் கோபமாக. இப்போது மெல்ல மெல்ல சிற்றூர்களில் பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கும் சாமியார்கள், ஜோதிடக்காரர்கள் போன்றோரை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இந்தப் போலி டாக்டர். அதற்கு விஜய் தொலைக்காட்சியும் பணம் பெற்றுக்கொண்டு துணைபோய்க் கொண்டிருக்கிறது.